சார் ஒரு சான்ஸ்... சிவா கோரிக்கை... ஷங்கர் ஏற்பு?

frame சார் ஒரு சான்ஸ்... சிவா கோரிக்கை... ஷங்கர் ஏற்பு?

Sekar Chandra
சென்னை:
சார்... ஒரு சான்ஸ்... ஷங்கரிடம் சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த வாரம் ரெமோ படத்தின் நிகழ்ச்சி நடந்தது. பிரமாண்டம் என்றால் பிரமாண்டம் அப்படி ஒரு பிரமாண்டம். 


பிரமாண்ட இயக்குனர் ஷங்கரையே இந்த நிகழ்ச்சி பிரமிக்க வைத்துவிட்டது என்றால் பாருங்களேன்.  இதை சிவகார்த்தியிடம் ஷங்கர் பாராட்ட... அப்போது சிவா ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.


'உங்க டைரக்‌ஷன்ல நடிக்கணும் சார்... ஒரு சான்ஸ் என்றவரிடம்ஷ ங்கர் 'இப்போ 2.ஓ மேல் மட்டும்தான் என்கவனம் இருக்கு. அது முடியட்டும். கண்டிப்பா பார்க்கலாம்' என்று சொன்னதாக கோடம்பாக்கம் பட்சி ஒன்று சொல்லி பறக்கிறது. இது உண்மையா? நடந்தால் நிச்சயம் அது வேறு தளமாக இருக்கலாம் என்று இப்போதே தகவல்கள் பரபரக்கின்றன. 


ஷங்கருக்கு ஆரம்பத்தில் இருந்தே சிவகார்த்திகேயன் மீது சின்ன பாசம் உண்டு. என்ன தெரியுங்களா. சொந்த ஊர் பாசம்தாங்க. ஷங்கருக்கு சொந்த ஊர் கும்பகோணம். சிவகார்த்திகேயனுக்கு கும்பகோணத்துக்கு அருகே இருக்கும் திருவீழிமிழலை. எப்படி?


Find Out More:

Related Articles:

Unable to Load More