பொழைக்க தெரிஞ்ச பொண்ணு... நித்யாவை பாராட்டும் சினிமா உலகம்

Sekar Chandra
சென்னை:
பாப்பா பொழைக்க தெரிஞ்ச பொண்ணு என்று நித்யா மேனனுக்கு சினிமா உலகம் பாராட்டுதுங்க... எதுக்கு தெரியுங்களா?


இவரு அறிமுகம் ஆனதில் இருந்தே சினிமாவை பற்றி நல்லா தெரிஞ்சுக்கிட்டார். ஓகே காதல் கண்மணியில் அம்மணி தனி ஹீரோயின். படமும் ஹிட்தான். அப்புறம் வந்த படங்களில் அம்மணி தனி ஹீரோயின் இல்ல. காஞ்சனா-2 இவர்தான் முக்கிய கேரக்டர்.
24 படத்தில் சின்ன கேரக்டர்தான். ஆனா அம்மணி மறுப்பே சொல்லலை.

24 திரைப்படத்தில் நித்யா மேனன் 


எந்த கேரக்டராக இருந்தாலும் சரி. மறுப்பே சொல்றது இல்லை. ஏன்னு விசாரிச்சா... இப்ப ஹீரோயின்களுக்கு ரொம்ப குறுகிய காலம்தான். புதுசு புதுசா ஹீரோயின்கள் வந்துக்கிட்டே இருக்காங்க. நம்ம திறமையை 2 பேரா இருந்து காட்டினா என்ன, தனியா இருந்து காட்டினா என்ன? பீல்டுல நிலைச்சு நிற்கணும். வருமானத்தை பார்த்திடணும்னு சொல்லுதாம் பொண்ணு. இப்ப இருமுகனிலும் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்கிறது லேட்டஸ்ட்.


Find Out More:

Related Articles: