கபாலி...சிங்கம் இன்று சென்னை ரிட்டர்ன்... 22ல் படம் ரிலீஸ்?

frame கபாலி...சிங்கம் இன்று சென்னை ரிட்டர்ன்... 22ல் படம் ரிலீஸ்?

Sekar Chandra
சென்னை:
சிங்கம் இன்று சென்னை வருகிறார்... நாளை பர்ஸ்ட் காப்பி பார்க்கிறார். 7ம் தேதி தணிக்கைக்கு போகும் படம் கண்டிப்பாக 22ம் தேதி ரிலீசாம்.. எந்த படம் என்று நாங்கள் சொல்ல வேண்டியதில்லை... கபாலிதான்...கபாலியேதான்.


மலாய் மொழியில் டப் செய்வது தாமதம் ஆனதால்தான் ரிலீஸ் தேதியும் தள்ளி போய்விட்டதாம். ரஜினி வாய்சை அந்த ஸ்டைல் மாறாமல் மலாய் மொழியில் பேச சரியான ஆள் கிடைக்காத நிலைதான் ரிலீஸ் தேதி தள்ளி போக காரணமாகி விட்டது.


இப்போ புதிய ஷெட்யூல்படி ரஜினி இன்று (3ம் தேதி) சென்னை வருகிறார். நாளை 4ந் தேதி பர்ஸ்ட் காப்பி பார்க்கிறார். 7ந் தேதி படம் தணிக்கைக்காக பறக்கிறது. 22ந் தேதி படம் கண்டிப்பாக ரிலீஸ் என்று கோடம்பாக்கத்து கோழிகள் உரக்கவே கத்துகிறது. 


இதில் 90 சதவீதம் மாற்றமே இருக்காது என்று சொல்றாங்கப்பா... சீக்கிரம் வாங்க கபாலி... உங்களை பார்க்க ரசிகர்கள் தவியாய் தவித்து கிடக்கிறார்கள்.



Find Out More:

Related Articles: