இங்க இவரு... அங்க அவரு... சுந்தர்.சி பட நாயகர்கள் இவங்கதானாம்...

frame இங்க இவரு... அங்க அவரு... சுந்தர்.சி பட நாயகர்கள் இவங்கதானாம்...

Sekar Chandra
சென்னை:
செம பெரிய பட்ஜெட்... மகா மெகா கூட்டணி என்று முதல்முறையாக சுந்தர்.சி. பிரமாண்ட இயக்குனர் அவதாரம் எடுக்கும் படத்துல விஜய்யும், மகேஷ்பாபும் நடிக்கிறாங்க... நடிக்கிறாங்க என்று உறுதியான தகவல்கள் வந்து இருக்குங்க...


சூப்பர் ஸ்டாரோட '2.0', 'பாகுபலி 2'  படங்களுக்கு இணையான மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள படம் 'சங்கமித்ரா'. இதோட இயக்குனர் குஷ்பு கணவர் சுந்தர்.சி  என்பதும், இந்த படத்தை பநீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதும் ஏற்கனவே தெரிந்த விஷயம். 


இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், கலைக்கு சாபுசிரில், கிராபிக்ஸ்க்கு கமலக்கண்ணன் என்ற மகா மெகா கூட்டணி முடிவான நிலையில்  
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தமிழில் இளையதளபதி விஜய், தெலுங்கில் பிரின்ஸ் மகேஷ்பாபுவும் நடிக்க உள்ளதுதான் தற்போதைய லேட்டஸ்ட் நியூஸ். அப்போ இந்தி... அதுக்கு இன்னும் முடிவு செய்யாம இருக்காங்களாம்.


இதுமட்டும் உறுதியாகிவிட்டால் ஒரே படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பில் விஜய்யும், மகேஷ்பாபுவும் ஒரே நேரத்தில் நடிக்கும் அதிசயம் நடந்தே விடும் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் ரவுண்டு கட்டி அடித்து வருகிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More