உள்குத்தை அள்ளி போட்ட அபி பிக்சர்ஸ்

Sekar Chandra
சென்னை:
உள்குத்தை அள்ளி போட்டு இருக்கு அபி பிக்சர்ஸ்... என்ன விஷயம்ன்னா...


தினேஷ் நடித்த திருடன் போலீஸ் படத்தை தயாரித்தவங்க கெனன்யா மூவீஸ். இப்போ தினேஷ், நந்திதா, பால சரவணன், ஜான் விஜய் நடிக்க உள்குத்து படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜீதான் இந்த படத்தையும் இயக்கி இருக்கார். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வாழ்க்கை கதை களத்தில் காமெடி படமா இதை எடுத்து இருக்காங்க..
படம் முடிஞ்சு அடுத்த கட்ட வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.


படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் ஏற்பட்டு இருப்பதால் படத்தோட  தமிழ்நாட்டு தியேட்டர் உரிமத்தை அபி அண்ட் அபி பிக்சர்ஸ் அள்ளிடுச்சாம்.. அள்ளிடுச்சாம். இது எப்படி!



Find Out More:

Related Articles: