கிளாமராக நடித்திருந்தால் பல படங்களில் நடித்திருப்பேன்-என்கிறார் சாந்தினி

Sekar Chandra
'சித்து பிளஸ் 2' படத்தில் அறிமுகமான சாந்தினி, 3 வருடம் கழித்து 'நய்யாண்டி', 'வில் அம்பு' படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்தார். அவர் கூறியது: தமிழில் சில வருடங்கள் கேப் விட்டு நடிக்க வந்தாலும் ரசிகர்கள் என்னை மறக்காமல் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். 


வாய்ப்புக்காக கிளாமராக நடிக்க ஓகே சொல்லி இருந்தால் இந்நேரம் நிறைய படங்களில் நடித்திருப்பேன். நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வேடங்களையே எதிர்பார்த்து காத்திருந்தேன். 


தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் 'மன்னர் வகையரா', சிபியுடன் 'கட்டப்பாவை காணோம்', பரத்துடன் 'என்னோடு விளையாடு', அஞ்சனா இயக்கத்தில் 'பல்லாண்டு வாழ்க', நடன இயக்குனர் கௌதம் இயக்கத்தில் 'கண்ணுல காச காட்டப்ப' அமீர் தயாரிப்பில் 'டாலர் தேசம்' மற்றும் நான் அவளை சந்தித்தபோது' போன்ற படங்களிலும் தெலுங்கில் ஒரு படமும் நடித்து வருகிறேன். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறினார்.



Find Out More:

Related Articles: