எமியம்மாவின் நான்காவது காதல்... பத்திரிகைகள் குட்டை உடைத்தன

frame எமியம்மாவின் நான்காவது காதல்... பத்திரிகைகள் குட்டை உடைத்தன

Sekar Chandra
சென்னை:
யம்மா... யம்மா...எமியம்மா... போட்டி போடுவது சரியில்லைம்மா... காதலில் விழுவதும் சரியாம்மா... ரஜினி படம் இருக்கும்மா என்கிறது கோலிவுட்.


நாடு நாடாகச் சுற்றும் மோடிக்கு இந்தியாவில் இருக்கும் ஒரே போட்டி எமி ஜாக்ஸன்தான். அந்தளவிற்கு எமி இந்தியாவில் இருக்கும் நாட்களையும் ஒற்றை கையில் உள்ள விரல்களை எண்ணி சொல்லி விடலாம். 


இங்குதான் இருக்கு அடுத்த மேட்டர். சமீபத்தில் நடந்த கேன்ஸ் பட விழாவுக்கு சென்றவர் அங்கு காதலில் சிக்கி உள்ளார். எமியை காதல் வலையில் வீழ்த்தியவர் ப்ரான்ஸின் பிரபல தொழிலதிபர் ஜீன் பெர்னார்ட் என்று பரபரக்கிறது தகவல்கள்.

காதலன் ஜீன் பெர்னார்ட் உடன் எமி ஜாக்சன் 


கேன்ஸ் முடிந்து ஒரு மாதம் ஆகியும் கூட காதலரை விட்டு வர மனமின்றி சுற்றி சுற்றி வருகிறாராம் எமி. யம்மா எமியம்மா... இது கணக்கில் வந்த உன்னோட நான்காவது காதல் என்று அங்குள்ள பத்திரிகை ஆதாரத்தோடு காட்டிவிட்டது.

எமி யம்மா... யார்கூட வேணாலும் சுத்துங்க... ஆனா சூப்பர் ஸ்டாரோட படம் இருக்கு... அதை மறந்திடாதீங்க என்று கோலிவுட் ரசிகர்கள் உஷார்படுத்தி உள்ளனர். 



Find Out More:

Related Articles:

Unable to Load More