சென்னை:
உங்க ஆசை என்னவோ நல்லாதான் இருக்கு. ஆனா ரசிகனுங்க பாவம். அவங்களை மனசுல வைச்சுக்கிட்டு எதை செய்யறதா இருந்தாலும் செய்யுங்க. என்ன விஷயம்ன்னா?
நம்ம சித்ராதேவி பிரியா இருக்காங்க இல்ல... அட நம்ம காஜல் அகர்வால்தாங்க. அவருக்கு ஒரு படத்திலேயாவது சொந்தக்குரலில் பேசணும்னு தணியாத, அடங்காத ஆசை. முன்னாடி நடிச்ச படத்துல அதுக்கு இடமே தரலை இயக்குனர்கள். இப்ப நடிக்கிற கருடா படத்தில் தன்னோட உள்ளக்கிடக்கையை இயக்குனர் திரு விடம் சொல்லியிருக்கார்.
அவர் மனசுல சித்ராதேவி பிரியா சில நிமிடங்கள் வந்து போனாங்களோ என்னவோ... தமிழை கற்றுக் கொள்ளுங்கள்...நன்றாக இருந்தால் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார். இப்ப தமிழை கரைத்து குடிக்க தமிழ் வாத்தியாரை வைத்து டியூசன் படித்து வர்றாராம். ரசிகர்களே ஜாக்கிரதை.