மங்காத்தாவில் இருந்து ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என தொடர்ந்து ஓரளவிற்கு ஹிட் படங்களை கொடுத்து வந்த அஜித், தனது 57 வது படத்தை இந்த ஆண்டே முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலில் அறுவை சிகிச்சை கொண்டதால் அந்தப்படம் சில மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது.
இருப்பினும் ஜூலை 15ல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிக்கும் பொருந்தக்கூடிய திரைக்கதையை உருவாக்கியிருக்கிறாராம் சிறுத்தை சிவா. அதோடு வேதாளம் படத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் நடித்த முடித்த அஜித் கிட்டத்தட்ட பத்து மாதங்களாக கேமரா முன்பு வரவில்லை.
இதற்கிடையே அறுவை சிகிச்சையும் நடந்ததால் உடற்பயிற்சிக்கு சில மாதங்களாக இடைவெளி கொடுத்திருந்தார். அதனால் அஜித்தின் உடல் எடையும் அதிகரித்துள்ளதாம். இந்நிலையில் வெளிநாடு சென்றிந்த அஜித் அங்கிருந்தபடி ஜிம் சென்று உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம். அதனால் முன்பு இருந்ததை விட ஸ்லிம் ஆகி விட்டாராம் அஜித்.