சென்னை:
1000 தியேட்டர்கள்... 1000 தியேட்டர்கள் புக் செய்யப்பட்டுள்ளதாம். எதற்கு தெரியுங்களா? கபாலி படத்திற்காகத்தான்.
22ம் தேதி... இல்ல 29ம் தேதி... இல்ல ஆகஸ்ட் மாதம்தான்... கபாலி ரிலீஸ் பற்றிதான் இப்படி சினிமா வட்டாரங்கள் பேசினாலும் தயாரிப்பு தரப்போ... இயக்குனர் தரப்போ.. இதுகுறித்து எவ்வித தகவலும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர். இதற்கிடையில் வட இந்தியாவில் இந்த படத்தை வெளியிட உரிமை வாங்கியுள்ள பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் 1000 தியேட்டர்களை புக் செய்துள்ளதாம்.
சாதாரண பட்ஜெட், சிறிய நடிகர்கள் படம் என்றால் தியேட்டர்கள் எண்ணிக்கை கொஞ்சம் கூட, குறைய இருந்தாலும் ரிலீஸ் செய்துவிடுவார்கள். ஆனால், இது பிரம்மாண்டமான படம். ஒரு டீசரிலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த படம்.
அதனால், தியேட்டர்கள் முதல் மற்ற வெளியீட்டு விவகாரங்கள் வரை அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்களாம். அதனால்தான் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லையாம்.
இந்தியாவில் மட்டுமே மொத்தமாக 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கபாலி' வெளியாகும் என்கிறார்கள். கபாலிடா... நெருப்புடா...