சொந்த குரலில் டப்பிங் பேச ஆசைப்படும் நடிகை

frame சொந்த குரலில் டப்பிங் பேச ஆசைப்படும் நடிகை

Sekar Chandra
இனிப்பு கடையின் பெயரை தனது பெயருக்கு பின்னால் வைத்திருக்கும் நடிகைக்கு தற்போது புதிய ஆசை துளிர்விட்டிருக்கிறதாம். அதாவது, நயன நடிகை சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில் அவரது சொந்த குரலில் பேசி நடித்திருந்தார். அந்த குரல் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகைக்கும் பலத்த பாராட்டுக்கள் வந்தது. 


அதேபோல், இந்த நடிகைக்கும் தனது சொந்த குரலில் பேசி நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறதாம். தனது ஆசையை இயக்குனரிடம் சொல்ல, இயக்குனரோ முதலில் தமிழில் நன்றாக பேசிக்காட்டுங்கள். அப்புறம் குரல் நன்றாக இருந்தால் டப்பிங் வைத்துக் கொள்வோம் என்று சொல்லிவிட்டாராம்.


இதனால், தமிழை கற்றுக்கொள்ள ஆசிரியர் ஒருவரை நியமித்து நடிகை தமிழ் கற்று வருகிறாராம். கூடிய விரைவில் கற்றுக் கொள்வார் என்று நடிகையின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More