அக்கட தேசத்து மேல கண் வைத்துள்ள நாயகி

frame அக்கட தேசத்து மேல கண் வைத்துள்ள நாயகி

Sekar Chandra
சென்னை:
உன்மேல ஒரு கண்ணுன்னு பாடின பொண்ணு அக்கட தேசத்து மேலேயும் வைச்சிருக்கு ஒரு கண்ணு. அதுக்காக அங்க உள்ள முன்னணி நாயகிகளின் லிஸ்டை வைச்சு அவங்களுக்கு வர்ற படத்தை தன் வசமாக்க ஐடியா செஞ்சுக்கிட்டு இருக்காம்.


அறிமுகமான சில காலத்திலேயே தளபதி நடிகருக்கே ஜோடி ஆனதால் இந்த பொண்ணுக்கு பூமி எது வானம் எதுன்னு தெரியாத நிலை. தமிழ்ல நிலையா ஒரு இடத்தை பிடிச்சிடலாம். இது மட்டுமே நம்ம ஏரியா கிடையாது பரந்த உலகில் சினிமா எங்கெல்லாம் தயாரிக்கிறாங்களே அது எல்லாமே நம்ம ஏரியாதான்னு பொண்ணு நினைச்சிருக்கு.


அதனால அக்கட தேசத்து முன்னணி நாயகிகளின் லிஸ்டை கையில் வைச்சுக்கிட்டு அவங்களுக்கு வர்ற வாய்ப்பை இடையில கால வுட்டு தன் பக்கம் இழுக்க போகுதாம் பொண்ணு. தட்டி பறிச்சா அது பெரிசாதான் இருக்கணும்னு முடிவு பண்ணி களத்தில் குதிச்சிருக்கு... குதிச்சிருக்கு. 


Find Out More:

Related Articles:

Unable to Load More