சமந்தா இடத்தை பிடித்த அமலா பால்

Sekar Chandra
'வடசென்னை' திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் சமந்தாவிற்கு, நாகசைதன்யா உடன் திருமணம் நடைபெறவுள்ளதால், அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் வெளிவருகின்றன. 


இதனால் படக்குழுவினர் சமந்தாவிற்கு பதில், அமலா பாலை இந்த படத்தில் புக் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகார பூர்வத் தகவல்கள்  வெளிவரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. 


மேலும் வடசென்னை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். தனுஷ், வெற்றிமாறன் மற்றும் லைக்கா நிறுவனம் மூவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  நடிகை ஆண்ட்ரியா இரண்டாவது கதாநாயகியாக இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Find Out More:

Related Articles: