ஆடுமேய்ச்சவன், அழகான பொண்ணு அட மன்சூர் படத்தலைப்புங்க

frame ஆடுமேய்ச்சவன், அழகான பொண்ணு அட மன்சூர் படத்தலைப்புங்க

Sekar Chandra
சென்னை:
இவரோட அலப்பறை... தொடருது...தொடருது. அடுத்து வருது அதிர வைக்கும் படமாம்.


அதிரடியான அறிமுகம்... தொடர்ந்து வில்லத்தனம் என்று கொடூரம் காட்டியவர் அப்புறம் நகைச்சுவை பக்கம் நகர்ந்தார். யார் தெரியுங்களா? மன்சூர் அலிகான்தான். எந்த வேடமாக இருந்தாலும் அதில் தன்னை செட் செய்து அதிரடிப்பது மன்சூரின் வாடிக்கை.


வில்லனாக இருந்தாலும் சரி நகைச்சுவையாக இருந்தாலும் சரி... குணச்சித்திரமாக இருந்தாலும் அதில் சூப்பராக நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விடுவார். இவர் சமீபகாலமாக தயாரிப்பிலும் குதித்து சில படங்களை வெளியிட்டார். தலைப்பு நமக்கு கொடுக்கும் தலைசுற்றலை... கடைசியாக இவர் அதிரடி என்ற படத்தை தயாரித்தார்.


இப்போ அடுத்ததாக தன் மகன் உட்பட 5 ஹீரோக்கள், 5 ஹீரோயின்கள் நடிக்கும் ஆடுமேய்ச்சவன் அழகான பொண்ணு என்ற தலைப்பில் படம் தயாரிக்கிறார். இதில் இவர் மட்டுமே நமக்கு அறிமுகமானவர்... மற்றவங்க எல்லாரும் புதுமுகங்கள். என்னவோ செய்யறார் பார்ப்போம்...


Find Out More:

Related Articles:

Unable to Load More