ஜிவி பிரகாஷின் எட்டாவது திரைப்படம் தொடங்கியது

Sekar Chandra
'டார்லிங்' திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஜிவி பிரகாஷ் அதன் பிறகு 'த்ரிஷா இல்லேனா நயன்தாரா', 'பென்சில்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 


இவர் நடிப்பில் தற்போது 'பிரூஸ்லி' மற்றும் ராஜேஷ் இயக்கத்தில் 'கடவுள் இருக்கான் குமாரு' உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகுகின்றன. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ள 8-வது திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைபெற்றுள்ளது. 


இந்த படத்தை எம்.எஸ்.சரவணன்  'ஸ்ரீ க்ரீன் ப்ரொடக்ஷன் நிறுவனம்' சார்பில் தயாரிக்கவுள்ளார். இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ள 4-வது திரைப்படம் இந்த புதிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளிவந்த 'ஜாக்சன் துறை' திரைப்படத்தை ஸ்ரீ க்ரீன் ப்ரொடக்ஷன் நிறுவனமே தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக  நடிக்கவுள்ள அவரது  8-வது திரைப்படத்தில், சத்யராஜ் மற்றும் தம்பி ராமைய்யா இருவரும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். ரோபோ ஷங்கர், அருண் ராஜ காமராஜா, ஆர்.ஜே. மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் துணைக்கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.


அறிமுக இயக்குனர் ஷண்முக முத்துசாமி இந்த படத்தை இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.



Find Out More:

Related Articles: