ரம்சான் பண்டிகை அன்று ரிலீசாகி  வெற்றிபெற்ற சல்மான் கானின் 6 திரைப்படங்கள் குறித்த ஆய்வு இதோ...

frame ரம்சான் பண்டிகை அன்று ரிலீசாகி வெற்றிபெற்ற சல்மான் கானின் 6 திரைப்படங்கள் குறித்த ஆய்வு இதோ...

Sekar Chandra
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த சில திரைப்படங்கள், ரம்சான் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை பெற்றுள்ளது. அவற்றில் சிலவை உங்கள் பார்வைக்காக..


1. வான்டட் 


            6 movies of Salman Khan released on Eid and its results!

வான்டட் திரைப்படம் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்காகும். இந்த படம் சல்மான் கான் நடிப்பில் உருவாகி, ரம்சான் பண்டிகையோடு ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் இந்த படம் இந்தியாவில் மட்டும் சுமார் 61 கோடி வசூல் செய்துள்ளது. 


2. டப்பாங் 


            6 movies of Salman Khan released on Eid and its results!

போலீஸ் தோற்றத்தில் சல்மான் கான் நடித்த 'டப்பாங்' திரைப்படம், திரையரங்குகளில் சுமார் 141 கோடியை வசூல் செய்துள்ளது.


3. பாடி கார்ட் 


            6 movies of Salman Khan released on Eid and its results!

தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'காவலன்' திரைப்படம், ஹிந்தியில் 'பாடி கார்ட்'  தலைப்பில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படம் சுமார் 145 கோடி இந்தியாவில் மட்டும் வசூல் ஆகியுள்ளது.


4. ஏக் தா டைகர் 


            6 movies of Salman Khan released on Eid and its results!

ரம்சான் அன்று வெளிவந்த இந்த படம் மெகா ஹிட் திரைப்படமானது. இந்த படம் இந்தியாவில் மட்டும் 200 கோடி வசூலை பெற்றுள்ளது. இதில் சல்மான் கான் மற்றும் கேத்ரினா கைப்  இருவரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.


5. கிக் 


சல்மான் கானுக்கு ரெக்கார்ட் பிரேக்கிங் அளித்த 'கிக்' திரைப்படம் சுமார் 233 கோடி வசூல் ஆகியுள்ளது. இந்த படம் ரசிகர்களுக்கு ரம்சான் விருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


6. பஜ்ரங்கி பைஜான் 


பஜ்ரங்கி பைஜான் திரைப்படம், எய்ட் முபராக்  பண்டிகையை முன்னிட்டு வெளிவந்து, சுமார் 300 கோடி வசூல் பெற்று, சாதனை படைத்தது. 


மேலும் இந்த ஆண்டு, ரம்சான் பண்டிகை அன்று, சல்மான் நடிப்பில் வெளிவந்த 'சுல்தான்' திரைப்படம் தற்போது ரசிகர்ளிடம் அமோக வரவேற்பு பெற்று வெற்றியடைந்து வருகின்றன.


Find Out More:

Related Articles: