சொல்லிட்டாங்க... 22ம் தேதி வர்றாரு "கபாலி" திரையரங்குகளில் திருவிழாதான்!

frame சொல்லிட்டாங்க... 22ம் தேதி வர்றாரு "கபாலி" திரையரங்குகளில் திருவிழாதான்!

Sekar Chandra
சென்னை:
ஏற்கனவே நாம சொன்ன மாதிரியேதான் நடந்து இருக்குங்க. என்ன தெரியுங்களா? உலக ரசிகர்களே எதிர்பார்த்து காத்திருந்த கபாலி படத்தின் ரிலீஸ் தேதி 22ம் தேதிதானாம். செய்தி கேள்விப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் செம கொண்டாட்டம் ஆகிவிட்டனர்.


இதோ, அதோ என்று ரசிகர்களை பெரும் ஆவலில் தள்ளிய கபாலி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை தாணு டுவிட்டரில் அறிவித்து விட்டார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வரும் 22ம் தேதி கபாலி ரிலீஸ் ஆகிறார். மலாய் மொழியில் மட்டும் ஒருவாரம் தள்ளி அதாவது 29ம் தேதி கபாலி வர்றார் பெரிய திரையில் ரசிகர்களை கவர. 


இத்தகவலை தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். கபாலி படம் சென்சார் செய்யப்பட்டு விட்டது. ரஜினி படத்திற்கு என்ன சர்ட்டிபிகேட் கிடைக்கும். 'U' சான்றிதழ்தான். இப்போ கபாலி ரசிகர்கள் செம ஹேப்பியாக உள்ளனர். 22ம் தேதி தமிழகமே அதிர போகிறது. அப்புறம் கபாலின்னா... என்ன சும்மாவா? கபாலிடா... அதெல்லாம் சரிங்க... டீசரை கொண்டாடி தீர்த்தாங்க ரசிகர்கள். ஆனால் இதுவரை இன்னும் டிரெய்லர் விடவே இல்லீங்களே... அது எப்போங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More