அவரை கழற்றி விட்டாரு... ஹாரீசை அழைச்சுக்கிட்டு வந்தாரு...

frame அவரை கழற்றி விட்டாரு... ஹாரீசை அழைச்சுக்கிட்டு வந்தாரு...

Sekar Chandra
சென்னை:
ஆரம்பத்தில் இருந்து கூட்டணியில் இருந்தவரை இப்போ அறுத்து விட்டு இருக்கார் இந்த டைரக்டர். யாருங்க? செய்தியை பாருங்க.


தன்னுடைய முதல்படமான கிரீடத்திலிருந்து கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இசைக்கு ஜி.வி.பிரகாசையே புக் செய்தவர் இயக்குனர் விஜய். இப்போ இவங்க கூட்டணிதான் முறிஞ்சு போய் கிடக்காம். இப்போ ஹாரிஸ் ஜெயராஜை இழுத்துக்கிட்டு வந்து இருக்கார் ஜெயம் ரவியோட இணைய படதுக்காக.


விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள 'தேவி எல்' படம் முடியும் நிலையில் வந்துடுச்சு. உடனேயே தன்னோட அடுத்த படத்துக்கான ஆரம்ப வேலையாக இதை செய்திருக்கார். 


இந்த படம் ஹாரீஸ் ஜெயராஜீக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விஜய் தன் கூட்டணியில் இருந்து ஜி.வி. பிரகாசை கழற்றிவிட என்ன காரணம் என்று லேசா விசாரிச்சப்போ... இப்போ அவரு ஹீரோ ஆகிட்டார். ஒத்துக்கிட்ட படங்களுக்கே சரியா இசை அமைத்து தருவதில்லை. அப்படியே தந்தாலும் அந்த பாடல்கள் ஹிட் அடிக்கமாட்டேங்குது. அதான் என்கின்றனர் கோலிவுட்டில்.


Find Out More:

Related Articles:

Unable to Load More