தங்கம், வெள்ளியிலும் கபாலி... கபாலி... ஜொலிக்க போறார்...

Sekar Chandra
சென்னை:
ஜொலிக்க போறார்... ஜொலி... ஜொலிக்க போறார் தங்கம், வெள்ளியில் கபாலி ஜொலிக்க போறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


விஷயம் என்னன்னா? கபாலி படம் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த பட புரோமோஷன்கள் வானத்துக்கும், பூமிக்கும் பாலம் போடாத குறைதான். விண்ணிலும் கபாலி, பூமியிலும் கபாலி. இப்போ தங்கம், வெள்ளியிலும் கபாலி. 


முன்னணி நிறுவனமான முத்தூட் நிறுவனம் கபாலி உருவம் பொதித்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிடுகிறது.சுமார் ரூ.40 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம், வெள்ளி நாணயங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாம். காரணம் 'கபாலி' உலகளவில் வியாபாரம் ஆகும் படம் என்பதால் 'கபாலி' நாணயமும் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறதாம் முத்தூட் குரூப்.


தங்கம், வெள்ளி நாணயத்தில் ஒரு திரைப்பட பெயர் வருவது இதுவே முதன்முறையாகும். மகிழ்ச்சி. மகிழ்ச்சி.


Find Out More:

Related Articles: