ஊட்டியில் நடக்குது மணிரத்னத்தின் அடுத்த படம்...

Sekar Chandra
சென்னை:
ஊட்டியில் தொடங்கிடுச்சாம் மணிரத்னத்தின் அடுத்த படம். இதில் கமலுக்கு பிடித்த நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.


காற்று வெளியிடை என்று பெயரிட்டுள்ள தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் மணிரத்னம் தொடங்கிவிட்டார். இதில் கார்த்தி, அதிதி ராவ், ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.


அத்தோடு கமலுக்கு பிடித்த ஆஸ்தான நடிகர் டெல்லி கணேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறாராம். தற்போது ஊட்டியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம். டெல்லி கணேஷ் என்றால் கமலுக்கு ரொம்ப பிடிக்கும். அவரது படங்களில் கண்டிப்பாக ஏதாவது ஒரு வேடத்தில் டெல்லி கணேஷ் நடித்துவிடுவார். தற்போது மணிரத்னம் படத்தில் இடம் பிடித்து நடித்து வருகிறாராம். ஊட்டியில் நடக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி கணேஷ் 


Find Out More:

Related Articles: