ஜேம்ஸ்பாண்டே வந்தாலும் கண்டுபிடிக்க முடியாது... 2.0 படப்பிடிப்பு

Sekar Chandra
சென்னை:
ஜேம்ஸ்பாண்டே வந்தாலும் கண்டுபிடிக்க முடியாது போல் இருக்கு. அவ்வளவு ரகசியமாக படத்தை எடுத்துக்கிட்டு வர்றாங்க. என்ன படம் தெரியுங்களா?


பிரமாண்ட டைரக்டர் ஷங்கர் ரஜினியை வைத்து எடுத்து வரும் 2.0 படம்தான். திருப்பதியை அடுத்த சுற்றுலாத்தலமான தலகோணா வனப் பகுதியில் இந்த படத்தோட படப்பிடிப்பு நடந்து வருதாம். 


தமிழ், தெலுங்கு, இந்தி என்று 3 மொழிகளிலும் தயாராகுது. இதற்காக இரவு நேரங்களில் சென்னை, மும்பையிலிருந்து 300 உதவியாளர்கள் கொண்ட குழு படப்பிடிப்பை நடத்தி வருகிறது. ரொம்ப ரொம்ப ஸ்டிக்ட்ராக நடந்துக்கிறாங்களாம. படக்குழுவை தவிர வேறு யாருக்கும் அனுமதியே கிடையாதாம். 


முக்கியமான காட்சிகள் அனைத்தும் இந்த வனப்பகுதியில் எடுக்கிறாங்க என்று அரசல் புரசலாக தகவல் வந்து இருக்கு. ஏற்கனவே இந்த படம் குறித்து சில செய்திகள் வந்ததால் டைரக்டர் ஷங்கரின் கண்டிப்புதான் இப்படி படம் பற்றி சின்ன செய்திகள் கூட தெரியாமல் இருக்க வைச்சிருக்கு.



Find Out More:

Related Articles: