ரித்திகா சிங் மேல செம டென்ஷன் "கண்"... டென்ஷன் "கண்"

Sekar Chandra
சென்னை:
இந்த பொண்ணு மேலதான் எல்லோருக்கும் செம கண்ணாம்... அட இந்த கண்ணு டென்ஷன் "கண்"ணுப்பா.


இறுதிச்சுற்று படத்தில் பின்னி பெடலெடுத்த ரித்திகா சிங்தான் தற்போது மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக இருக்கிறார். ஒரு படம் என்றாலும் தன் திறமையை காட்டியதால் கோலிவுட் மிரண்டு போய் கிடக்கு. பொண்ணு வேற பாக்சிங் கிங். ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் இப்போ பேவரியட் கிங் இந்த ரித்திகா சிங்தான்.


விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்துவரும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வீட்டு கதவை தேடி வந்து தட்டுதாம். செலக்டிவா தான் நடிப்பேன் என்று சொன்னவர் இப்போ தேடிவரும் வாய்ப்புகளை பார்த்து கல்லாவை நிரப்புவதே முதல் குறிக்கோள் என்று களம் இறங்கிட்டாராம். 


பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் சிவலிங்கா படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாகிட்டார் இவர். இந்த படத்தின் கன்னடத்தில் நடித்தவர் வேதிகா. ரித்திகா வேடத்துக்கு முதலில் பேசப்பட்டது ஹன்சிகா.


ஆனா வாய்ப்பு போனது என்னவோ ரித்திகாவிற்கு. அதனால இப்ப இவங்க 2 பேரும் செம டென்ஷன் பேபியாக இருக்காங்களாம்.



Find Out More:

Related Articles: