தயாரிப்பாளராக களம் குதிக்கும் இயக்குனர் ரஞ்சித்

Sekar Chandra
சென்னை:
துணிச்சலாக களம் இறங்குகிறார் இயக்குனர் ரஞ்சித் என்று கோலிவுட் வட்டாரங்கள் பரபரக்கின்றன. இது கபாலி மேட்டர் இல்லீங்க. அப்புறம் என்கிறீர்களா?


இதோ அந்த செய்தி...  கபாலி படத்தின் மூலம் உலக ரசிகர்களே உற்று நோக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் இயக்குனர் ரஞ்சித். 3வது படமே சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்குவதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் இவர் அடுத்த படத்திற்கு நடிகர் சூர்யாவுடன் கூட்டணி போடுகிறார்.


அதுமட்டுமின்றி துணிச்சலாக ஒரு விஷயத்தில் இறங்கி உள்ளார். அதாவது ஒரு சில சிறு பட்ஜெட் படங்களை இவர் தயாரிப்பாளராக இருந்து தயாரிக்க உள்ளாராம். திறமையான இயக்குனர்கள் நிரம்பி உள்ள கோடம்பாக்கத்தில் தானும் அந்த திறமையை ஊக்குவிக்கதான் இந்த முடிவாம். மகிழ்ச்சி... வெற்றிப்பெற வாழ்த்துவோம் நாமும்.



Find Out More:

Related Articles: