ராகவ லாரன்ஸின் அடுத்த படம் தொடங்கியது...

frame ராகவ லாரன்ஸின் அடுத்த படம் தொடங்கியது...

Sekar Chandra
ராகவ லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'மொட்டை சிவா கேட்ட சிவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு, நேற்று முன்தினத்தோடு நிறைவடைந்தது என்பதை நாம் அறிந்தோம். 


இதையடுத்து அவர், பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்த 'சிவலிங்கா' திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் தொடக்க விழா, பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இதில் இயக்குனர் வாசு, ராகவா லாரன்ஸ், இயக்குனர் வாசுவின் மகன் ஷக்தி, நடிகை ரித்திகா சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.


மேலும் இந்த படத்தில் ராகவ லாரன்ஸிற்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். ஷக்தி வாசு இன்னொரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இந்த படம் தமிழிலும், 'சிவலிங்கா' என்ற பெயரிலே தயாராகுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



Find Out More:

Related Articles:

Unable to Load More