சென்னை:
யாரோ ஒருவர் என்பேரிலா... வேண்டாம்... வேண்டாம்... இதே நானே வருகிறேன் என்று இவரும் வந்துவிட்டார்.
யார் தெரியுங்களா? ரோபோ ஷங்கர்தான். தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கலக்கி வரும் காமெடியன். இவர் பெயரில் யாரோ ஒருவர் நீண்ட நாட்களாக டுவிட்டரில் பதிவுகள் போட அதன் தாக்கம் இவருக்கு வந்து சேர... அவன் நானில்லை... என்று எத்தனை முறைதான் பதில் சொல்வது ரோபோ ஷங்கர்.
பொறுத்து பொறுத்து பார்த்த அவர்... அவன் நான் இல்லவே இல்லீங்க... இனி இதுதான் என்னோட டுவிட்டர் கணக்கு. இப்ப நானே நேரடியா களத்துக்கு வந்துட்டேன்னு களம் இறங்கி டுவிட்டர் கணக்கை தொடங்கி ஒரு பதிவையும் போட்டு விட்டார். அப்போ... போலி... அது அம்புட்டுதான் காலி.