ஐதராபாத்:
ஆத்தாடி இம்புட்டா... தாங்காதும்மா... தாங்காது என்று பதறி போய் உள்ளதாம் இந்த படக்குழு? கடைசி வரைக்கும் பிடி கொடுக்கலையேன்னு அந்த நடிகை மீது செம கடுப்பில் உள்ளார்களாம்.
என்ன விஷயம்ன்னா... டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பல... பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரிதாரம் பூசி களத்தில் இறங்குகிறார் ஹீரோவாக.
இந்த படம் தமிழில் விஜய் நடித்த கத்தியின் ரீமேக். இந்த படத்தை இயக்குவது வி.வி.விநாயக். இசை பேமஸ் இசையமைப்பாளர் தேவிபநீ பிரசாத். தயாரிப்பது சிரஞ்சீவியின் மகனும், இளம் சூப்பர் ஸ்டாருமான ராம்சரண். இந்த படத்தை விநியோகிக்கும் உரிமையை லைக்கா நிறுவனம் இப்பவே கைப்பற்றி விட்டது.
இப்படி பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு இன்னும் ஹீரோயில் அமையலை என்பதுதான் வேதனையோ... வேதனை. பல நடிகைகளிடம் ராம்சரணே நேரடியாக பேசியும்... ஆளவுடுங்கப்பா என்று எஸ்கேப் ஆகியிருக்காங்க.
கடைசியில் காஜலிடம் பேசியுள்ளது படக்குழு. முடியாதுன்னு நேரடியாக சொல்லாமல் இரண்டரை கோடி ரூபாய் சம்பளம் கேட்க படபடப்பில் மயக்கமே வந்துவிட்டதாம் படக்குழுவிற்கு. காஜல் நடிப்பில் வெளியான 'பிரமோத்சவம்', 'சர்தார் கப்பர் சிங்' இரண்டுமே அட்டர் பிளாப் படங்கள். இருந்தாலும் இவ்வளவு சம்பளம் கேட்டு தெறிக்க விட்டுள்ளார். மீண்டும் வேறு ஹீரோயின் தேடும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது.
சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்கள் பலரும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறாராம் ராம்சரண். அட என்னப்பா இது சிரஞ்சீவிக்கு வந்த சோதனை.