பெர்லின்:
யார் தெரியுங்களா இன்றைய கதாநாயகன்... பெர்லின் பத்திரிகையிலும் இடம் பிடித்துவிட்டார் அவர்? அவர் யாரென்று சொல்லதான் வேண்டுமா?
அவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிதாங்க. கபாலி திரைப்படம் குறித்து ஜெர்மனி பத்திரிக்கை ஒன்று ‛மேன் ஆப் தி டே' என்னும் தலைப்பில் ரஜினி புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
கபாலி திரைப்படம் குறித்து தமிழ் ஊடகங்கள் மட்டுமல்லாது இந்திய அளவிலான ஊடகங்களும் ரஜினி பற்றிய செய்திகளைதான் வெளியிட்டது. ஆனால் தற்போது அந்த எல்லைகள் தாண்டி ஜெர்மன் மொழியில் வெளிவரும் அந்நாட்டு பத்திரிக்கையிலும் கபாலி பற்றிய செய்தி வந்துள்ளது.
என்னன்னு தெரியுங்களா? ரஜினி பற்றி விளக்கமாக சொல்லியுள்ள அந்த பத்திரிகை தனிப்பட்ட தன் ஸ்டைலால் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தார். இந்திய சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என பெயர் சூட்டப்பட்டவர். இவர் நடித்துள்ள கபாலி படம் இன்று வெளியாகிறது.
உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து இன்றைய தினத்தின் கதாநாயகனாக ரஜினி மாறியுள்ளார் என்று விரிவாக விளக்கமாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெருமையும் ரஜினிக்கே சேரும். மகிழ்ச்சி... மகிழ்ச்சி...