நானே... அது நானே... என்று களத்தில் குதித்த மோகன்லால்

Sekar Chandra
சென்னை:
நான்தான் வாங்குவேன்... என்று மீண்டும் களம் புகுந்துள்ளார் இவர் என்று தகவல்கள் பரபரக்கின்றன.


யாரு தெரியுங்களா? விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் முக்கியமான கேரக்டரில் வெளுத்து கட்டினார். அது மட்டுமா அந்த படத்தில் கேரள மாநில ரிலீஸ் உரிமையும் அவருக்குதான் கிடைத்தது.


நேற்று வெளியான கபாலி படத்தின் கேரள மாநில உரிமையையும் மோகன்லால்தான் வாங்கி எப்போதும் இல்லாத அளவிற்கு ஏராளமான தியேட்டரிகளில் களம் இறக்கி இருக்கிறார். இப்போ... இவர் விஜய் நடித்து வரும் படத்தையும் வாங்க ட்ரை பண்ணுறாராம். எப்படியும் வாங்கிடுவார் என்று சொல்றாங்க. இவர் இப்போ சொந்தமாக தியேட்டர் கட்டியிருக்கிறார். இதில் முதல் படமே கபாலிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


விஜய்க்கு கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் இருப்பதால் அடுத்த படத்தை கைப்பற்ற "செமத்தியாக" தயாரிப்பு தரப்பில் பேசி வருகிறாராம் மோகன்லால். நடத்துங்க... 


Find Out More:

Related Articles: