கபாலி முன்னாடி... பாகுபலி பின்னாடி சாதனை முறியடிப்பு

Sekar Chandra
சென்னை:
பாகுபலியை "கபாலி" வெற்றிக் கொண்டுவிட்டதாம். புரியலையா? இப்ப புரியும் பாருங்கள்.


கபாலி படம் நேற்று அமெரிக்காவில் கிட்டத்தட்ட 225 திரையரங்குகளில் வெளியானது. எந்த தமிழ்படத்திற்கும் இவ்வளவு தியேட்டர்கள் புக் ஆகவில்லை என்பதுதான் உண்மை. அதிலும் முன்பதிவின் போது சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது என்பது தனிக்கதை.


இந்நிலையில் ப்ரீமியர் காட்சியில் மட்டும் 1.3 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது கபாலி படம். இது 177 திரையரங்குகளில் கிடைத்த வசூல் நிலவரம். மற்ற தியேட்டர்களிலும் என்று கணக்கு போட்டு பார்த்தால் கண்டிப்பாக நேற்றே 2 மில்லியன் டாலரை கபாலி அள்ளியிருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் பாகுபலி சாதனையை கபாலி முறியடித்து விட்டது. கபாலின்னா சும்மாவா?



Find Out More:

Related Articles: