சென்னை:
உண்மைதான் போலிருக்கிறது என்கிறது கோலிவுட் கோவிந்துகள் டீம். என்ன விஷயம்ன்னா?
சிவா இயக்கத்தில் "தல" நடிக்கும் புதிய படத்தில் கமலின் இளைய மகள் அக்சராஹாசனை ஒப்பந்தம் செஞ்சுட்டாங்களாம். இதனால் அவரா... இவரா... என்று இருந்த குழப்பம் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிய வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக சொல்லாம இருக்காங்களேப்பா... என்கின்றனர் "தல" ரசிகர்கள்.
ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க அக்சரா ஹாசனிடம் கேட்டுள்ளார் இயக்குனர் சிவா.
கதையும், கதாபாத்திரமும் பிடித்துப்போக சரி என்று ஒப்புக் கொண்டுள்ளாராம் அவர். இயக்குனராக வேண்டும் என்ற இருந்தவர் இப்போது திரையில் நடிக்க ஆரம்பித்து விட்டார். "தல" பட வாய்ப்பு என்றால் சும்மாவா!