ஐதராபாத்:
எப்படி சொல்லலாம் என்று ரசிகர்கள் குதறிய குதறலில் ஆடி போய் விட்டார் இயக்குனர் ஒருவர். சாரி கேட்டபின்னரே இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
தனது 150 -வது படத்தின் கதைக்காக பல வருடங்கள் காத்திருந்த சிரஞ்சீவி கடைசியில் தமிழில் முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தை ரீமேக் செய்து நடிக்கிறார். ஆனால் இவரது முடிவு சரியல்ல என்று இயக்குனர் ஒருவர் கூறி சிரஞ்சீவி ரசிகர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளார்.
அவர் சொன்னது இதுதான். இயக்குனர் கொண்டன்தரமி ரெட்டி சிரஞ்சீவி இன்னும் கொஞ்சம் கமர்ஷியலான கதையை தேர்வு செய்திருக்கலாம் என்று சொல்ல, சிரஞ்சீவியின் ரசிகர்கள் அவர் மீது பாய்ந்து குதறிவிட்டனர்.
தவறே செய்தாலும் சூப்பர் ஸ்டார்கள்...சூப்பர் ஸ்டார்கள்தான் என்பதுபோல் உள்ளனர் அவரது ரசிகர்கள். கண்டன அலைகள் அதிகளவில் எழுந்ததால் ரெட்டி மன்னிப்பு கேட்டார். இதன் பிறகே பிரச்சனை முடிவுக்கு வந்தது. அது... என்று தற்போது திருப்தி ஆகி உள்ளனராம் ரசிகர்கள்.