'வேதாளம்' திரைப்படத்திற்கு பிறகு அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 57-வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். வில்லன் கதாப்பாத்திரத்தில், முக்கிய நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகார பூர்வத்த தகவல்கள் வெளிவரும்.
பெயரிடப்படாத இந்த படத்தை, அனைவரும் 'தல 57' என்று அழைக்கிறார்கள். ஆக்ஷன் திகில் திரைப்படமாக இப்படம் உருவாக்கவுள்ளது. இதில் அஜித் சர்வதேச எப்.பி.ஐ ஏஜெண்டாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இதன் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக, அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பல்கேரியா நாட்டிற்கு செல்லவுள்ளனர்.
மேலும் இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அனிருத் இசையமைக்கிறார்.