சென்னை:
ரீல் ஜோடிகளாக இருந்தனர்.. அப்புறம் ரியல் ஜோடிகளாக இருந்தாலும் இலைமறை காயாக விஷயம் இருந்தது. இப்போது இவங்க திருமணம் செய்துக் கொள்ள போறாங்க என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
யார்ன்னு தெரிஞ்சுக்குவோமா? அவங்க எங்கேயும் எப்போதும் என்று படத்தில் ஜோடி போட்ட ஜெய், அஞ்சலிதான். இப்படத்துக்கு அப்புறம் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போ பலூன் படத்தில் நடிக்கின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் "லவ்"வில் விழுந்து விட்டதாக கோடம்பாக்கம் கோடங்கிகள் உடுக்கை அடித்து உலகுக்கே சொல்லிவிட்டனர். ஆனால் அது இப்போதுதான் உண்மையாக போகிறதாம்.
இந்த விஷயத்தை முன்னணி சேனல் ஒன்று போட்டு உடைத்து உண்மை என்று சொல்ல கோலிவுட்டே பரபரத்தது. நல்ல விஷயம்... நல்ல ஜோடி...