சென்னை:
அழகும், திறமையும் இருந்தாலும் மலையாள நடிகைகளுக்கு குடும்ப வாழ்வு என்பது விட்டில் பூச்சி வாழ்க்கை தான் போல் உள்ளது. என்னவென்று பார்ப்போமா?
அழகும், திறமையும் கொண்டவர்கள் மலையாள நடிகைகள். தமிழ், தெலுங்கு சினிமாக்களிலும் தற்போது மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. என்னத்தான் சினிமாவில் வெற்றிப்பெற்றாலும் வாழ்க்கையில் இவர்கள் சந்திப்பது என்னவோ தோல்விதான். குடும்ப வாழ்க்கை கேள்விக்குறியாகதான் உள்ளது.
மனம் போல் மணத்தை தேர்ந்தெடுத்தாலும் அந்த வாழ்க்கை மணக்காமல் போய் விடுகிறது. இப்படி டைவேர்ஸ் பெற்றவர்கள் யார் என்று பார்க்கலாமா? காவ்யா மாதவன், 2009ல் நிஷால் சந்திராவை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர் தன்னை சித்ரவதை செய்வதாக கூறி 2011ல் விவாகரத்து பெற்றார்.
மஞ்சு வாரியர் கதையே தனி. 1998ல் நடிகர் திலீப்புடன் காதல் திருமணம். நன்றாக போன திருமண வாழ்க்கை 2015ல் டைவேர்சில் முடிந்தது. மம்தா மோகன்தாஸ் 2011ல் திருமணம் ஒரே வருடத்தில் டைவேர்ஸ். லிசி இயக்குனர் பிரியதர்ஷனை 1990ல் காதல் திருமணம் செய்துகொண்ட இவர் 13 வருட வாழ்க்கைக்கு பின்னர் விவாகரத்து பெற்றார். மலையாள உலகமே இதற்காக பெரும் வருத்தத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
நம்ம கோலிவுட்டில் வெகுகாலம் ஆட்சி செய்த ஊர்வசி. மலையாளியாக இருந்தாலும் தமிழர்களால் அதிகம் நேசிக்கப்பட்டவர். தற்போதும் தமிழ் படங்களில் அம்மா வேடத்தில் சக்கை போடு போடுபவர். இவர் 2000ம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்துகொண்டார். இல்லறம் நல்லறமாக சென்றாலும் 2008ல் விவாகரத்து செய்தார்.
இந்த லிஸ்டில் அடுத்தவர் ஜோதிர்மயி 2004ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் 8 வருட வாழ்க்கைக்கு பிறகு 2011ல் டைவேர்ஸ்... டைவேர்ஸ் என்று பிரிந்து சென்றார். இதில் நடிகைகள் கலாரஞ்சனி, லெனா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
இந்த பெரும் லிஸ்டில் நானும் வந்து பங்கு எடுத்துக் கொள்கிறேன் என்று தற்போது அமலாபாலும் வந்திட்டார். சாதனைகளுக்கு பின்னால் இதுபோன்ற வேதனைதான் போலுள்ளது.