கலாபவன் மணி மரணத்தை சிபிஐ விசாரிக்க போகுது... டிஜிபி தகவல்

Sekar Tamil
திருவனந்தபுரம்:
கேரளாவை உலுக்கிய கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க போகிறது. அவர்களிம் இது தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட உள்ளது என்று கேரளா டிஜிபி தெரிவித்துள்ளார்.


கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாலக்குடியைச் சேர்ந்தவர் நடிகர் கலாபவன் மணி. மலையாள திரையுலகில் முன்னணி நடிகர். இவர் தமிழில் ஜெமினி படத்திற்கு பிறகு இங்கும் புகழ் பெற்றார். இவர் நடிப்பை தமிழ் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். 


இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இவர் சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சாவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இவரது இறப்புக்கு காரணம் விஷம் என்று உடல் உறுப்புகள் ஆய்வில் தெரியவந்தது. 


போலீசின் தீவிர விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை அம்மாநில அரசும் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.


இந்நிலையில் கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா, மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில், கலாபவன் மணி மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாகவும், இது தொடர்பான ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா


Find Out More:

Related Articles: