எப்படி... இப்படி? நகத்தை கடித்து துப்பி டென்ஷனாகும் நடிகை

Sekar Tamil
சென்னை:
செம டென்ஷன் ஆக்குறாங்களே... ஒரே படத்தில் நடிச்சு... திறமையை காட்டி என்று விரல் உள்ள நகங்களை கடித்து துப்பி வருகிறாராம் இந்த நடிகை.


எந்த நடிகை... வேறு யாரு சின்ன குஷ்புன்னு சொல்ற ஹன்சிகா மோத்வானிதான். ஏன் இம்புட்டு டென்ஷன் தெரியுங்களா... அதுவும் யார் மீது தெரியுங்களா?


இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் தன் "நடிப்பால்" அனைவரையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். அடுத்து இவருக்கு ஆண்டவன் கட்டளை படம் திரைக்கு வருகிறது. அதுமட்டுமா... பி.வாசு இயக்கும் சிவலிங்கா படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 


பர்ஸ்ட் இந்த படத்தில் நடிக்க ஹன்சிகாவை தான் பேச இருந்தார்களாம். ஆனால் இந்த அம்மணி எல்லா படத்திலேயேம் ஒரே மாதிரி நடிப்பதால் (?) ரிஜெக்ட் செஞ்சு இருக்காங்க. காரணம் இந்த படத்தில் ஹீரோயினுக்கு நல்ல ஸ்கோப் இருக்காம். இதற்கிடையில் ரித்திகாசிங்கை கேள்விப்பட்டு இயக்குனர் வாசு அவரையே புக் செய்து விட்டார்.


இதுதான் ஹன்சிகாவிற்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏங்க அம்மணி எப்ப பாரு டால் பொம்மையாட்டம் வந்து நின்னா போதுங்களா... நடிக்க வேண்டாமா?


Find Out More:

Related Articles: