வேண்டாம்.. அவருடன் நானா? ஒப்பிடாதீர்கள்...

Sekar Tamil
மும்பை:
அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம்... வேண்டாம் என்று நடிகை மறுப்பு தெரிவித்துள்ளார். யார்? ஏன்? இதே பாருங்க செய்தியை!


கத்ரீனா கைஃபுடன் ஒப்பிட வேண்டாம் என்னை ஒப்பிடாதீர்கள் என்று  பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


இலங்கை அழகியான ஜாக்குலின் பெர்ணான்டஸ் பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது அவரது நடிப்பிற்கு நல்ல பெயர் கிடைக்க பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகிறது.


இங்குதான் ஆரம்பம் ஆனது பிரச்னை. பலர் அவரை நடிகை கத்ரீனா கைஃபுடன் ஒப்பிடுகிறார்கள். இதனால் ஜாக்குலின் தன் தரப்பை  கூறுகையில், தயவு செய்து என்னை கத்ரீனாவுடன் ஒப்பிடாதீர்கள். நாங்கள் இருவரும் வித்தியாசமானவர்கள். மக்கள் எங்களை அப்படி தான் பார்க்க வேண்டும். கத்ரீனா எல்லாருக்கும் முன்மாதிரியாக இருந்து வருகிறார். வெளிநாடுகளில் இருந்து பாலிவுட்டுக்கு வருபவர்களுக்கு அவர் தான் ரோல் மாடல்.


எனவே அவரை என்னுடன் ஒப்பிடாதீர்கள். நான் இப்போதுதான் வளர ஆரம்பித்துள்ளேன் என்று அடக்கமாக தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles: