தல 57 திரைப்படத்தில் தேசிய நடிகர் வில்லன்

frame தல 57 திரைப்படத்தில் தேசிய நடிகர் வில்லன்

Sekar Tamil
அஜித் தற்போது தனது 57-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பேனர் தயாரிக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது பெல்ஜிரியாவில் நடைபெறுகிறது. 


இந்த படத்தின் வில்லன் அரவிந்த் ஸ்வாமி, விஜய் சேதுபதி, பிரசன்னா என பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


அவர் வேறு யாரும் இல்லை. நமது கோலிவுட் 'அசால்ட் சேது' தான் என்ன புரிய வில்லையா.... 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் அசால்ட் சேது கதாப்பாத்திரத்தில் நடித்த பாபி சிம்ஹா தான் இந்த படத்தின் வில்லன் என செய்திகள் வெளிவந்துள்ளன. 


இதுகுறித்த அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More