சென்னை:
இதுதான்டா போலீஸ்... டாக்டர் ராஜசேகருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்த படம். இப்போது இதே தலைப்பில் நம்ம விருமாண்டி அபிராமி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி உள்ளது.
விஸ்வரூபம் படத்தில் பூஜா குமாருக்கு டப்பிங் பேச அமெரிக்காவில் இருந்த அபிராமியை தேடி கண்டுபிடித்தார் கமல். அப்புறம் என்ன தொடர்ச்சியாக மலையாளத்தில் நடித்து வருகிறார் அபிராமி.
தமிழில் 36 வயதினிலே படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். ஆனால் அதிகமான மலையாளத்தின்தான் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான இதுதாண்டா போலீசில் போலீசாக நடித்தார். தற்போது, ஒரே முகம் என்ற படத்தில் விரிவுரையாளராக நடிக்க உள்ளார். எல்லாம் சரிதாங்க...
தமிழுக்கு எப்போ வர்றீங்க? என்று ஆவலாக கேட்கின்றனர் ரசிகர்கள்.