ரவுண்டு... ரவுண்டு... அடுத்த ரவுண்டு...? பூர்ணா மிதப்பு

Sekar Tamil
சென்னை:
ரவுண்டு... ரவுண்டு அடுத்த ரவுண்டு...சந்தோஷத்தில் விசிலடிக்குதாம் இந்த அம்மணி. யார் தெரியுங்களா?


அசின் போல் இருக்கும் பூர்ணாதான். இப்போ இவர் கையில் மிஷ்கினுடன் சவரக்கத்தி, வினய்யுடன் அம்மாயி படங்கள் இருக்கு. இப்போ தமிழில் வாய்ப்புகள் வந்துக்கிட்டு இருந்தாலும் மிஷ்கினின் சவரக்கத்தி வந்தால் தன் கால்ஷீட் டைரி ரொம்பி வழியும் என்று நினைக்கிறாராம் அம்மணி. மீண்டும்... மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன்னு அம்மணி தொடை தட்டி பயமுறுத்துராறாம்.


அட உங்களுக்கு விஷயம் தெரியாதா அம்மணி. மிஷ்கின் படத்தில் நடிச்ச எந்த நடிகையும் டாப்புல போனதா சரித்திரம் இல்ல... இது கதாநாயகர்களுக்கும் பொருந்தும். அம்புட்டு ராசி என்கின்றனர் கோடம்பாக்கம் கோடங்கிகள். அப்ப அம்மணி நினைப்புல அல்வாதானா?



Find Out More:

Related Articles: