நானே யோசிக்கலை... அதுக்குள்ள பற்ற வைச்சது யாருப்பா...

Sekar Tamil
சென்னை:
நானே யோசிக்கலை... அதுக்குள்ள யாருப்பா பற்ற வைச்சது என்று தன் ட்ரேட் மார்க் சிரிப்போடு கேட்கிறாராம் இவர்.


யார் தெரியுங்களா? இயக்குனர் வெங்கட் பிரபுதான். இவரது  இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த "சரோஜா"தான் இப்போ.. வதந்தி வசந்தா வாயில் சிக்கி தவித்து வருகிறது.


இந்த படத்தின் 2ம் பாகம் சீக்கிரமே வரபோகுது. இதில் இயக்குனர்  எஸ்.ஜே.சூர்யா ஹீரோ என்று கை, கால், வாய், மூக்கு முளைத்த செய்தி ஒன்று ரவுண்டு கட்டி கோலிவுட்டை கலங்கடிக்க... அட யாருப்பா... இது... எனக்கே வராத ஐடியாவை எல்லாம் கொளுத்தி போடறது... இப்போ சென்னை-28 பார்ட்2லதான் என் கவனம் முழுக்க இருக்கு. அதனால அந்த சரோஜா-2 பற்றி நோ ஐடியான்னு சொல்லி வதந்தி வசந்தாவுக்கு கொட்டு வைச்சுருக்கார் வெங்கட் பிரபு.



Find Out More:

Related Articles: