பாஹுபலி நடிகருக்கு ஜோடியான சிவகார்த்திகேயன் நடிகை

Sekar Tamil
சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படத்தில் நடித்து, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ரெஜினா, தற்போது செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தில் நடித்துள்ளார். 


மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக புது படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது ஒரு புது படத்தில் நடிக்க புக்காகியுள்ளார். 


'பாஹுபலி' வில்லன் ராணா டகுபதி நடிக்கவுள்ள 'மடை திறந்து' என்ற திரைப்படத்தில் ரெஜினா நடிக்கவுள்ளார். இந்த படம் தெலுங்குவில் '1945' என்ற தலைப்பில் உருவாகவுள்ளது. 


ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் கொச்சியில் தொடங்கவுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். 


Find Out More:

Related Articles: