பலமுறை திருமணம் செய்துள்ள தெலுங்கு நடிகர்கள்....

Sekar Tamil
தெலுங்கு சினிமாவில் உள்ள 10 நடிகர்கள், பலதடவை திருமணம் செய்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை நாம் இப்போது பார்க்கலாம். 


1. நாகர்ஜுனா 


பிரபல நடிகர் நாகர்ஜுனா, தயாரிப்பாளர் ராம நாய்டுவின் மகள் லட்சுமி டகுபதியை, திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, நாகசைதன்யா பிறந்த பிறகு 1990-ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு 1992-ல் அமலா-வை மணந்தார். 


2. பவன் கல்யாண் 


பவன் கல்யாண் முதலில் நந்தினியை மணந்தார். அதன் பிறகு 2007-ல் இவரை விவாகரத்து செய்து ரேணு டேசையை திருமணம் செய்து கொண்டார். ரேணு, பவன் கல்யாணுடன் 'பத்ரி' திரைப்படத்தில் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


3.பிரகாஷ் ராஜ் 


நடிகர் பிரகாஷ் ராஜ், லலிதா குமாரியை விவாகரத்து செய்து விட்டு, பாலிவுட்  கோரியோகிராபர் போனி வர்மாவை மணந்தார். இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில் சமீபத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது.


4. கமல் ஹாசன் 


உலக நாயகன் கமல் ஹாசன் முதலில் டான்சர் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டு, அவருடன் 10 ஆண்டுகள் வாழ்ந்து, அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு சரிகாவை இரண்டாவது திருமணம் செய்தார், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் பிறந்தனர். சரிகாவையும் விவாகரத்து செய்துவிட்டு தற்போது நடிகை கவுதமியுடன் வாழ்ந்து வருகின்றார்.


5. கிருஷ்ணா 


நடிகர் கிருஷ்ணா முதலில் இந்திராணியை திருமணம் செய்து கொண்டு, மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். அதன் பிறகு இரண்டாவதாக விஜய நிர்மலாவை மணந்தார்.


6. என்.டி ராமா ராவ் 


பிரபல பழம்பெரும் நடிகர் என்.டி ராமா ராவ், பசவ தரகமை முதலில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இரண்டாவதாக லட்சுமி பார்வதியை மணந்தார்.


7. கிருஷ்ணம் ராஜு 


கிருஷ்ணம் ராஜு முதலில் சீதா தேவியை மணந்தார். சீதா தேவி, கார் விபத்தில் இறந்த பிறகு, இரண்டாவதாக ஷ்யாமளா தேவியை மணந்தார். 


8. ஷரத் பாபு 


1981-ல் ஷரத் பாபு, ராம பிரபாவை மணந்தார். அதன் பிறகு பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரை திருமணம் செய்து கொண்டார். இவரையும் விவாகரத்து செய்து விட்டு, தற்போது 61 வயது கொண்ட பத்திரிக்கையாளர் பெண்ணுடன் வாழ்ந்து வருகிறாராம். 


9. மோகன் பாபு 


550-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் முதலில் மஞ்சு வித்யா தேவியை மணந்தார். மஞ்சு வித்யா இறந்த பிறகு அவரது தங்கை மஞ்சு நிர்மலா தேவியை மணந்தார்.


10 கீர்த்தி ரெட்டி 


கீர்த்தி நடிகர் சுமந்தை முதலில் திருமணம் செய்து, விவாகரத்து பெற்றார். அதன் பிறகு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.




 



Find Out More:

Related Articles: