சென்னை:
காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு விட்டனர் என்று புகார் ஒன்று எழுந்துள்ளது. யார் மீது தெரியுங்களா?
யார் என்பதை விட யார்... யார் மீது என்றால் சரியாக இருக்கும். இந்த புகார் கூறும் கைவிரல் பாண்டவர் அணியை நோக்கி நீள்கிறது. விஷயம் இதுதான். நடிகர் சங்க தேர்தல் பலகட்ட பிரச்னைகளுக்கு மத்தியில் முடிந்து பாண்டவர் அணி (அதாங்க நாசர், விஷால் அணி) வெற்றி பெற்றது.
நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும் உள்ளனர்.
தற்போது இவர்கள் தன்னை வெளியேற்றி விட்டதாக நடிகர் சங்க உறுப்பினர் சங்கையா என்பவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவர் பாண்டவர் அணிக்காக முழுநேரமாக பிரச்சாரம் செய்தவராம்.
நடிகர் சங்க உறுப்பினர் சங்கையா
படங்களுக்கு ஜீனியர் ஆர்டிஸ்ட்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வந்த இவருக்கும், நடிகர் சங்கத்திலிருந்த மேனேஜர் ஒருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இவர் படங்களுக்கு முறைகேடாக ஆட்களை கூட்டி வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டு தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டாராம்.
இதுபற்றி நாசர், விஷால் ஆகியோரிடம் கூறியபோது, உன்னால் ஜெயிக்கவில்லை என்று தெரிவித்து என்னை வெளியேற்றி விட்டார்கள் என்று புகார் தெரிவித்துள்ளார். இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க விஷால்.