சின்னதிரைக்கு சென்ற சிரிப்பழகி....

Sekar Tamil
பிரஷாந்த் நடித்த 'விரும்புகிறேன்' திரைப்படத்தில் நடித்து, சினிமாவிற்கு அறிமுகமான சினேகா, அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். 


கமல் ஹாசன், விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், சிம்பு உள்ளிட்ட நடிகர்களோடு திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து திருமணத்திற்கு பிறகு ஹரிதாஸ், உன் சமையல் அறையில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். 


அதன் பிறகு கடந்த ஆண்டு, இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை சினேகா விட்டுவிட்ட நிலையில், தற்போது ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். 




ஆனால் இந்தமுறை வெள்ளி திரையில் அல்ல சின்ன திரையில், பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோவில், நடுவராக பங்கேற்க உள்ளார். 


Find Out More:

Related Articles: