மலையாளம் கண்டுக்கலை... தமிழ் அள்ளிக் கொடுக்குது...

frame மலையாளம் கண்டுக்கலை... தமிழ் அள்ளிக் கொடுக்குது...

Sekar Tamil
சென்னை:
அவங்க கண்டுக்கலைன்னு நினைக்காதீங்க... நாங்க இருக்கோம்ன்னு லட்சுமி மேனனுக்கு தமிழில் வாய்ப்பு மழை கொட்டுகிறது. கண்டுக்காதவங்க யாருன்னு கேட்கறீங்களா?


வேறு யாரு மலையாள படஉலகத்தினர்தான். ஆனால் லட்சுமிமேனனுக்கு தமிழில் கிடைக்கும் வாய்ப்பு மழை இருக்கே... அதுவும் பெரிய நடிகர்களுடன்... விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக ஜீவாவுடன் நடிக்க உள்ளார்.


இயக்குனர் அருண் ஜீவாவை வைத்து இயக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் லட்சுமி மேனனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படம் எமோஷனல் த்ரில்லர். அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தோட கதை பிடிச்சு போனால் லட்சுமிமேனன் ஓகே சொல்லிடுவார்ன்னு கோடம்பாக்கம் கோபாலுக்கள் சொல்றாங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More