ஆசை... ஒரே ஒரு ஆசை... "தல"க்கு பாடணும்... தனுஷ்

Sekar Tamil
சென்னை:
ஒரே ஆசை... இதுதான் என் ஆசை... என்று திருவாய் மலர்ந்துள்ளார் இந்த நடிகர். யார் தெரியுங்களா?


"தல" தன்னுடைய 57வது படத்தில் தற்போது பிஸியோ பிஸி. இவர் அந்த பக்கம் நடிக்க... இந்த பக்கம் அனிருத் பாடல்களுக்காக விறுவிறுப்பாக இசையமைத்து வருகிறார். இது தெரிந்த செய்திதான்.


இந்நிலையில்தான் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டயின் போது "தல" ஒரு பாடல் பாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்று திருவாய் மலர்ந்து கூறியுள்ளார் நடிகர் தனுஷ். 


என்னுடைய ஆசை நிறைவேறும் நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் ஒரு டுவிஸ்ட் வைத்தார். அப்போ... அனிருத் இசையில் "தல" படத்தில் இவர் பாடப்போறாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.


கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே ஆகணும். பொறுத்திருந்து பார்ப்போம்...



Find Out More:

Related Articles: