அடுத்த பாண்டவர் அணி ரெடியாகுதாம்... ரெடியாகுதாம்...

frame அடுத்த பாண்டவர் அணி ரெடியாகுதாம்... ரெடியாகுதாம்...

Sekar Tamil
சென்னை:
இது மட்டுமா... இன்னும் இருக்கு என்று சரவெடி கொளுத்த ரெடியாகிட்டாராம் விஷால் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். 


என்னவென்று விசாரித்தால்... செம ஐடியாவோடுதான் களத்தில் குதித்துள்ளார் விஷால் என்று தெரிகிறது. விஷயம் என்னன்னா? நடிகர் சங்கத்தை எப்படி இளைஞர் படையோடு கைப்பற்றினாரோ... அதாங்க பாண்டவர் அணி... அதுபோல இப்போ அடுத்த சங்கத்திற்கும் குறி வைச்சுட்டாராம். தற்போது திருட்டு விசிடியை ஒழிக்க மும்முரமாக களத்தில் இறங்கி இருக்கும் விஷால் தயாரிப்பாளர் சங்கம் மீது சில குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து வருகிறாராம்.


அடுத்த வருஷம் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் பாண்டவர் அணியை போல ஒரு புதிய அணியை இறக்க 
திட்டமிட்டு வேலைகள் செய்து வருகிறாராம். அப்போ நடிகர் சங்கம், இப்போ தயாரிப்பாளர் சங்கமா... நடத்துங்க ராசா... நல்லதையே நடத்துங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More