பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறுத்தை சிவா

Sekar Tamil
பிரபல நடிகர் அஜித்திற்கு மிகவும் பிடித்தமான இயக்குனர் சிறுத்தை சிவா தான் என்று கூறலாம். ஏனெனில் இவர் இயக்கத்தில் அஜித் இதுவரை 2 திரைப்படங்களும், தற்போது ஒரு திரைப்படமும் நடித்து வருகிறார். 


ஒளிப்பதிவாளராக இவர் சினிமாவிற்கு அறிமுகமாகி, தற்போது முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர் இயக்கிய 'சிறுத்தை' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால், இவரை அனைவரும் சிறுத்தை சிவா என்று அழைக்கின்றனர்.
மேலும் வீரம், வேதாளம் ஆகிய இருதிரைப்படங்களையும் அஜித்தை வைத்து இயக்கி, ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை இவர் பிடித்துள்ளார். 


இந்நிலையில்,சிறுத்தை சிவா இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 


மேலும் இவர் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ தமிழ் ஹெரால்டு சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


Find Out More:

Related Articles: