வரேன்.....வரேன்...செப் 1-ந்தேதி....வரேன்

Sekar Tamil
செப் 1 - ந்தேதி ரசிகர்களுக்கு முக்கியமான நாளாக அமைய உள்ளது. புரியவில்லையா... அது என்னவென்றால்....


சீயான் விக்ரம் நடித்துள்ள 'இருமுகன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 1-ந்தேதி, திரையரங்கிற்கு வருகிறது. இந்த தகவலை அதிகார பூர்வமாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். 


'இருமுகன்' திரைப்படத்தில் வித்தியாசமாக, பெண் வேடம் உள்ளிட்ட சில தோற்றங்களில் விக்ரம் நடித்துள்ளார். முதன்முறையாக இவருக்கு நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து, வெளியிட இருக்கிறார்.


விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் சரியாக வரவேற்பு பெறாததால், அவர்'இருமுகன்' திரைப்படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளார்.


Find Out More:

Related Articles: